2015 ஜனவரி 08 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் எதிர்கட்சித் தலைவர் வாக்களித்த பிரதான வாக்குறுதிகளில் ஒன்று அரசியலமைப்பில் மாற்றங்களை கொண்டு வருதல் ஆகும். இந்த யோசனை, தேசிய இயக்கத்தின் முன்னணி வகித்த மாடுலுவேவ சோபித தேரோவினால் முன்னெடுக்கப்பட்டது.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நோக்கம் கொண்ட பாராளுமன்றம், ஏப்ரல் 05, 2016 அன்று ஒரு அரசியலமைப்புச் சபையாக மாற்றப்பட்டது.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான கூட்டமைப்பு இலங்கையின் பாராளுமன்ற சபாநாயகரால் தலைமை தாங்கப்படுகின்றது. பிரதமர் வழி நடத்தும் குழுவின் தலைவர் ஆவார், அதில் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு கட்சிகளில் 21 உறுப்பினர்கள் உள்ளனர்.

அடிப்படை உரிமைகள், நீதித்துறை, சட்டம் மற்றும் ஒழுங்கு, மாநில நிதி, பொது சேவை மற்றும் மைய-உறவுகள் ஆகியவற்றின் பகுதிகளை பார்வையிட அரசியலமைப்பு வரைவு குழுவின் கீழ் செயல்பட 6 துணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பல தசாப்தங்களாக அரசியல் ரீதியான பிளவுகளின் பின்னர், இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள் இந்த சாதனையை அடைய சிறுபான்மை கட்சிகளுடன் சேர்ந்து கொண்டுள்ளன.

தற்போது அதிகாரத்தில் இருக்கும் இந்த கூட்டணி அரசாங்கத்தின் கீழ் புதிய அரசியலமைப்பை உருவாக்குவது, நாட்டில் நீண்டகால சமாதானத்தையும் ஜனநாயகத்தையும் உண்டாக்கும் என்று நம்புகிறது.

புதிய அரசியலமைப்பின் முக்கிய கூறுகள் பின்வருமாறு வகைப்படுத்தலாம்:
1. தேர்தல் முறைமைக்கு சீர்திருத்தங்கள்
2. நிறைவேற்று ஜனாதிபதி நீக்கம்
3. அதிகாரப் பரவலாக்கம்

இது முற்றிலும் ஜனநாயக அரசியலமைப்பை உருவாக்க முற்படுவதற்கு முதல் முறையாகும்.. புதிய அரசியலமைப்பிற்கான முன்மொழிவு பொது மக்களுடைய ஆலோசனைகள் மற்றும் யோசனைகளை உள்ளடக்கியுள்ளது.

பொது பிரதிநிதி குழுவானது பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற தீவின் 25 மாவட்டங்களை பார்வையிட்டது.

வழிநடத்தும் குழுவின் இடைக்கால அறிக்கை பாராளுமன்றத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் அனைத்து ஆலோசனைகளும் கருத்துகளும் முன்மொழிவுகளும் வழிநடத்தும் குழு அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளன.

புதிய அரசியலமைப்பின் உள்ளடக்கத்திற்கு பொதுமக்கள் இப்போது பதில்களையும் பரிந்துரைகளையும் வழங்க முடியும்.