உலகில் மூன்றில் ஒரு பகுதி நிலம் ! மூன்றில் இரண்டு பகுதி நீர் ! அந்த ஒருபகுதி நிலப்பரப்பில் வாழ்வனவற்றுக்கு இந்த நீர் அத்தியாவசியமானது. ஆனால் என்றும் போதமை உள்ளது. எதிர்காலத்தில் குடிநீருக்கான யுத்தங்கள் மூளலாம் என ஆய்வாளர்கள் கூறத்தொடங்கிவிட்டனர்.
எதிர் காலத்தில் அல்ல, இப் பொளுதிலிருந்தே ஆங்காங்கு குடிநீர் பிரச்சினைகள் உருவாகிவிட்டதனை அவதானிக்க முடிகின்றது.

ஆசியாவின் முத்து என வர்ணிக்கப்படும் ,நீரினால் சூழப்பட்ட இலங்கையிலும் பல பிரதேசங்களில் நல்ல குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவியேவருகிறது. இங்கே ஒரு கிராமம் குடிநீருக்காக அங்கலாய்க்கின்றது.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் தலைநகராம் திருகோனமலையின் மொறவேவ பிரதேசத்தின் நாமல்வத்த பகுதியில் வாழ்ந்துவரும் சுமார் 200 குடும்பங்களைக் கொண்ட 1500 பேருக்கு குடிப்பதற்கு குடிநீர் இல்லை. ஏன்?
கிணறுகள், நீர்த்தாங்கிகள், குளம் என நீரைப்பெறுவதற்கான மூலங்கள் உருவாக்கப்பட்டிருந்தும் குடிநீருக்கு மக்கள் அங்கலாய்ப்பதன் காரணம் என்ன?

திருகோனமலையில் மூவின மக்களும் ஒன்றாக செறிந்து வாழுகின்ற போது சிங்களவர்களுடன் தமிழ் போசும் முஸ்லீம்களும் இனைந்து இவ் அழகிய ஊரின் அவலனிலையினை தீர்த்து வைக்க என்ன வழி?
காலையில் விடிகின்ற பொழுதினில் முதற் கொண்டு இரவு தூங்கும் நேரம் வரைக்கும் மனிதனின் முக முக்கிய தேவையாக இருக்கின்ற நீர் எமக்கு எப்போது கிடைக்கும்……என்கின்றார் ரிஸானா பேகம்

வசிப்பிடத்தில் இருந்து சுமார் 01கிலோ மீற்றர் தூரத்தில் மெறவெவ குளம் இருந்தாலும் அங்கு சென்று நீர் எடுத்துவருவதற்கு அங்கிருக்கும் முதலைகள் அச்சமாக உள்ளன இதனால் உயிருக்கு உத்தரவாதம் அற்ற நிலமை,காணப்படுகின்றது

இப்ப நாங்க இந்த தன்னிய எடுத்து எங்கட பில்டர்ல ஊத்தி வடிச்சித்தான் குடிக்கிற…என்கின்றார் காமிலா பேகம்

இங்கு வருடத்தின் மிக முக்கியமா ஓகஸ்ட், செப்டொம்பர் , ஒக்டொபர் ஆகிய மூண்று மாதங்கள் நீர் இல்லாமல் இருப்பதற்கு இயர்கையின் கொடுமையும் எமக்கொரு சாபமாகும் இருப்பினும் இக்கால கட்டத்தில் பிரதேச சபையூடாக நீர் வழங்கப்பட்டாலும் போதாத தன்மை காணப்படுகின்றது

நாமல்வத்த ஆழ்துளை கினறுகளை நிர்மாணிக்க நிலத்திற்கு கீழுள்ள மலைகள் தடையாக இருக்கின்றது இது போலவே கட்டப்பட்டுள்ள தீர்த்தாங்கிக்கு நீரினை கொண்டு வர அருகில் உலக வங்கியின் நிதி உதவியினால் யூஎஸ் எயிட் நிறுவணத்தினால் நிர்மானிக்கப்பட்ட இரண்டு கிணறுகளும் ஒரு நீர்த்தாங்கியும் அமைக்கப்பட்டு இருந்தது இந்த நீர்த்தங்கியில் இருந்து80 வீடுகளுக்கு அல்கிமா -நிறுவணத்தினால் குழாய் நீர் இனைப்புக்களும் வழங்கப்பட்டு இருந்தும் இதுவரை நீர்வினியோகம் ஒழுங்காக வழங்கப்படாமல் குறிப்பிட்ட சில மணி நேரங்கள் மட்டும் வழங்கப்பட்டு அதர்கான பணமும் வசூலிக்கப்படுகின்றமை மனவருத்தமே

எனினும் நிர்மாணிக்கப்பட்ட சில நாட்களிலேயே திட்டம் தோல்வியினை தழுவியது இப் பிரதேச மக்களுக்கு பேர் இழப்பாகும் குறித்த திட்த்தின் ஊடாக நிர்மானிக்கப்பட்ட நீர் தாங்கிக்கு போதுமான நீரினை பெற்றுக் கொள்கொள்ளும் அளாவிற்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள கிணறுகளில் நீர் இல்லாமை இதன் தோல்விக்கான முதல்

சரியான திட்டமிடல் இன்றி எங்களது வரிப்பனம் பிழையான முறையில் செலவு செய்யப்பட்டுள்ளது இதற்கு இந்த திட்டத்தினை நெறிப்படுத்தியவர்களும் ஒப்பந்த காரர்களுமே பதில் கூறவேண்டும் என ஆதங்கத்துடன் தெரிவித்தார் அப்துல் ரகுமான்

”நாங்கள் எவழவு சொல்லியும் இந்த ஒப்பந்த காரங்க கேட்கல… இங்க கிணறு போடுற நீங்க இன்னும் கொன்சம் ஆழமா போட்டாத்தன் நல்லா தன்னி வரும் எண்டனாங்க ஆனா அவங்க எங்களுக்கு 20அடி தோட்ட மட்டும் தான் ஒப்பந்தம் செஞ்சம் எண்டு சொல்லிடாஙக”என்கின்றார் ஆசிரியர் அச்மிர்
இக் குடிநீர் வினியோகிக்கப்படும் முதல் வடிகட்டும் தன்மைகானப்படினும் இதன் வடிகட்டல் தன்மையில் எமக்கு சந்தேகம் காணப்படுகின்றது இதனை குறித்த நீர் பருசேதனை அமைப்புக்கள் தாங்களுக்கு பருசேதனை செய்து உறுத்திப்படுத்த வேண்டும் ஏனேனில் தற்போது பருகும் நீரில் உப்புச் சுவையினை உணர முடிகின்றது

மின்சார தடை ஏற்படும் பற்சத்தில் நீர் வினியோக கட்டமைப்பில் சிக்கல் நிலமை தோன்றுவது உன்மையாகும்
நாள் ஒன்றிற்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரங்களே நீர் வினியோகிக்க முடிகின்றது காரணம் கிணற்றின் நீர் மட்டம் குறைவடைகின்ற தன்மையே ஆகும் கிணற்றில் நீர் ஊற்றுக்கள் மிக குறைவாகவே வருகின்றன என்கின்றார் உறுப்பினர் ஆசிரியர் அச்மிர் தொல்வி அடைந்தமைக்கான காரணங்களாக முன்கூட்டிய சூழல் சாந்த அனுபவம் இன்மையும் பயனுகரிகளின் கருத்துக்களை மேலதிகாரிகள் கவனத்தில் கொள்ளாமையும் ஆகும்
குறித்த பயனுகரிகளின் கருத்தினை உள்வாங்கி இந்த திட்ட்த்தினை செய்திருப்பின் நீர் கொடைத்திருக்கலாம், தற்போது 20 அடி தோண்டப்பட்ட கிணற்றில் சிறிதளவு நீர் காணப்படும் போது இன்னும் 05 அல்லது 06 அடிகள் ஆழமாக்கப்பட்டிருப்பின் சிறந்த நீர் கிடைத்து இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவே தென் படுகின்றன

பிரதேச சமையினூடாக குடி நீர் வினியோகிக்கப்படினும் போதாதா நிலைமை இருப்பதாகவும் நடைமுறைப்படுத்துவதில் சில சிக்கல் நிலமைகள் கானப்படுவதாகவும் எதிர்காலத்தில் இதனை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் பிரதேச சபை தகவல்கள் தெரிவிக்கின்றன

கடல் நீரினை குடிநீராக மாற்றும் தொலில் நுட்பம் காணப்படுகின்ற இக் கால கட்ட்த்தில் ஏன் கடலின் நடுவினிலே மிதக்கும் விவசாய பண்னைகள் இருந்து வரும் நிலையில் இப் பகுதியில் வாழும் மக்களுக்கு விடிவிற்கான திட்டமாக தற்போது முன்வைக்கப்படுவது

குளதிற்கு அருகாமையில் ஆழமாக்குதலுடன் குளத்து நீரினை கொண்டு வந்து சுத்திகரித்து வழங்கும் திட்டமே இது நடைமுறைப் படுத்தப்பட்டால் மட்டுமே நிரந்தர தீர்வினை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கின்றனர் சூழலியலாளர்கள்

இதற்கு பிரதேச சபையும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையும் 2017ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் நிதியினை ஒதுக்கவேண்டும் என்பதே இப் பகுதிவாழ் மக்களின் கோரிக்கையாகும்

img-20160902-wa0012